/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புறக்காவல் நிலையம் அமைக்க அசோக்பாபு எம்.எல்.ஏ., மனு புறக்காவல் நிலையம் அமைக்க அசோக்பாபு எம்.எல்.ஏ., மனு
புறக்காவல் நிலையம் அமைக்க அசோக்பாபு எம்.எல்.ஏ., மனு
புறக்காவல் நிலையம் அமைக்க அசோக்பாபு எம்.எல்.ஏ., மனு
புறக்காவல் நிலையம் அமைக்க அசோக்பாபு எம்.எல்.ஏ., மனு
ADDED : ஜூலை 18, 2024 11:11 PM

புதுச்சேரி: புதுச்சேரி, 100 அடி மேம்பால பகுதியில், புறக்காவல் நிலையம் அமைக்க, போலீஸ் டி.ஜி.பி., ஸ்ரீநிவா ஸிடம், அசோக்பாபு எம்.எல்.ஏ., மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
முதலியார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட, 100 அடி மேம்பாலத்தின் கீழ், சட்டத்திற்கு புறம்பான சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மது, கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை மற்றும் செயின் பறிப்பு போன்ற குற்றச்செயல்கள் நடக்கும் இடமாக செயல்பட்டு வருகிறது.
அந்த பாலத்தின் அருகே உள்ள நகரில் வசிக்கும் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும், பெண்கள் தனியே நடந்து செல்ல பாதுகாப்பற்ற பகுதியாகவும் இருக்கிறது. அந்த பகுதியில் தொடர்ந்து குற்றச்செயல் நடந்து வருகிறது.
இதனால் பாலத்தின் அருகே வசிக்கும் ஜான் பால் நகர், காயத்ரி நகர், அனிதா நகர், சோழன் நகர், தீரன் சத்தியமூர்த்தி நகர், வாரியார் நகரில் வசிக்கும் மக்கள், பெரிய அச்சுறுத்தளுக்கு ஆளாகி, வாழ்வதற்கே அஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவற்றை கண்காணித்து தடுப்பதற்கு அப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட டி.ஜி.பி., உடனடியாக அப்பகுதியை ஆய்வு செய்து, குற்ற செயல்களையும் தடுத்து, புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.