/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டிரைவர் மீது தாக்குதல்: மூவருக்கு போலீஸ் வலை டிரைவர் மீது தாக்குதல்: மூவருக்கு போலீஸ் வலை
டிரைவர் மீது தாக்குதல்: மூவருக்கு போலீஸ் வலை
டிரைவர் மீது தாக்குதல்: மூவருக்கு போலீஸ் வலை
டிரைவர் மீது தாக்குதல்: மூவருக்கு போலீஸ் வலை
ADDED : ஜூலை 16, 2024 05:11 AM

புதுச்சேரி: சாராயக்கடையில் ஏற்பட்ட மோதலில் டிரைவரை பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த ஜி.என்.பாளையம் வள்ளியம்மை நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் 32, டிரைவர். இவர் ரெட்டியார்பாளையம் ஜெயா நகரைச் சேர்ந்த ஸ்டிபன்ராஜ் 31, என்பவருடன் நேற்று அதிகாலை அரசூர் சாராயக்கடையில் சாராயம் குடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சாரயம் குடித்து கொண்டிருந்த கோபாலன்கடையைச் சேர்ந்த ராம்குமார் 27, சரண் 23, கணுவாப்பேட்டை சேர்ந்த தமிழ்செல்வன் 26, ஆகியோர் பிரபாகரனிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதில் ஆத்திரமடைந்த சரண் உள்ளிட்ட மூன்று பேரும் சேர்ந்து பிரபாகரனை சாராய பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து பிரபாகரன் வில்லியனுார் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மூவரையும் தேடி வருகின்றனர்.