Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வில்லியனுாரில் பிற்படுத்தப்பட்டோர் பெண்கள் விடுதி

வில்லியனுாரில் பிற்படுத்தப்பட்டோர் பெண்கள் விடுதி

வில்லியனுாரில் பிற்படுத்தப்பட்டோர் பெண்கள் விடுதி

வில்லியனுாரில் பிற்படுத்தப்பட்டோர் பெண்கள் விடுதி

ADDED : ஆக 02, 2024 11:39 PM


Google News

சமூக நலம்


சர்வதேச மற்றும் தேசிய, வட்டார அளவில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் அங்கீகரிக்கப்பட்ட மாற்று திறனாளிகள் விளையாட்டு சங்கங்களுக்கு பயணபடி, அகவிலைப்படி, விளையாட்டு உபகரணங்கள் வாங்க நிதி உதவி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

போதை மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிக்க சுகாதாரத்துறையுடன் இணைந்து போதை தடுப்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் நிறுவப்படும். நடப்பு நிதி ஆண்டிற்கு ரூ. 108.98 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை


குழந்தைகள் வளர்ச்சியை கண்காணிக்க அங்கன்வாடி ஊழியர்களுக்கு வளர்ச்சி கண்காணிக்கும் டிவைஸ் வழங்கப்பட உள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களின் குழந்தைகளை பராமரிக்க அங்கன்வாடி மையங்கள், அங்கன்வாடி மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையமாக மாற்றப்படும். குழந்தைகளை இணைய வழி பாலியியல் துன்புறுத்தல் மற்றும் சுரண்டல்களில் இருந்து பாதுகாக்க, குழந்தைகள் பாதுகாப்பான ஆன்லைன் என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நடப்பு நிதியாண்டிற்கு இத்துறைக்கு ரூ. 753.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் வில்லியனுார் மற்றும் காமராஜர் நகரில் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கான புதிய விடுதி கட்டப்பட உள்ளது. பிரதமரின் ஜன் விகாஸ் காரியகரம் திட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதியை கண்டறிந்து அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மாணவர்களுக்கு திறன் மேம்பாடு, போட்டி தேர்வு பயிற்சி அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்துறைக்கு ரூ. 21.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us