/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

ADDED : மே 04, 2024 07:09 AM


Google News
காரைக்கால் : காரைக்காலில் மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவாரூர், வண்டாம்பாளையம், பூங்கா நகரை சேர்ந்தவர் அன்பரசன்; வெல்டர். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 9 வயதில் சுவேதா என்ற மகளும், ஒன்றரை வயதில் யோகேஷ்வர் என்ற மகனும் உள்ளனர்.

கோடை விடுமுறை என்பதால் ராஜேஸ்வரி தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவரது சொந்த ஊரான காரைக்கால் நிரவி காக்கா மொழிக்கு கடந்த 1ம் தேதி சென்றார்.

நேற்று முன்தினம் ராஜேஸ்வரியின் சகோதரர் பிரகாஷின் வீட்டில் இருந்த டேபிள் பேனின் ஒயரை பிடித்து இழுத்த யோகேஷ்வரை மின்சாரம் தாக்கியது. அவரை உறவினர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் யோகேஷ்வர் பரிதாபமாக இறந்தார். நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.