ADDED : ஜூலை 27, 2024 01:52 AM
நெட்டப்பாக்கம்: மடுகரை எல்லையம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சாகை வார்த்தல் விழா நடந்தது.
இதையொட்டி காலை 8.00 மணிக்கு நத்தமேடு அம்பாள் கோவிலில் இருந்து சக்தி கரகம் ஜோடித்து வீதியுலாவுடன் கோவிலுக்கு வந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனைகள் நடந்தது. பின் மதியம் 12 மணிக்கு சாகை வார்க்கப்பட்டது. மாலை 6 மணிக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு சுவாமி வீதியுலா நடந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.