/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஊர்காவல்படை வீரர் பணிக்கு 8ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு ஊர்காவல்படை வீரர் பணிக்கு 8ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
ஊர்காவல்படை வீரர் பணிக்கு 8ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
ஊர்காவல்படை வீரர் பணிக்கு 8ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
ஊர்காவல்படை வீரர் பணிக்கு 8ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
ADDED : ஜூலை 03, 2024 05:43 AM
புதுச்சேரி, : ஊர்காவல்படை வீரர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் 8 ம் தேதி முதல் 12ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
புதுச்சேரி போலீசில் காலியாக உள்ள 420 ஆண், 80 பெண் ஊர்காவல்படை வீரர்கள் தேர்வு செய்ய கடந்த ஆண்டு ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டது.
ஆண்கள் 15,697 பேரும், பெண்கள் 4492 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த பிப்., மாதம் நடந்தது. ஆண்கள் 3034 பேரும், பெண்கள் 1195 பேர் என மொத்தம் 4229 பேர் தகுதி பெற்றனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 30ம் தேதி, புதுச்சேரியில் 12 தேர்வு மையத்தில் நடந்தது. மறுநாளான நேற்று முன்தினம் 1ம் தேதி இரவு தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்பட்டது.
எழுத்துத் தேர்வில் தேர்வான விண்ணப்பதாரர்கள் வரும் 7 ம் தேதிக்குள் புதிய குடியிருப்பு மற்றும் குடியுரிமை சான்றிதழ்களை உடனடியாக அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்று கொள்ள வேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 8 ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை புதுச்சேரி போலீஸ் தலைமையகத்தில் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர்கள் சிறப்பு பிரிவு சான்றளிப்பு படிவத்தை, புதுச்சேரி போலீஸ் இணையதளத்தில் 'Latest News>2022>Recruitment Cell Attestation form and Identity certificate dated 26.03.2022 கீழ் பதிவிறக்கம் செய்து, உரிய முறையில் பூர்த்து செய்து புதுச்சேரி நபர்கள், துய்மாஸ் வீதியில் உள்ள போலீஸ் தலைமையகம் எஸ்.பி., அலுவலகம், காரைக்காலில் மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள சீனியர் எஸ்.பி., அலுவலகத்திலும், மாகியில் எஸ்.பி., அலுவலகம், ஏனாமில் எஸ்.பி., அலுவலகத்தில் இன்று 3ம் தேதி அல்லது நாளை 4ம் தேதிக்குள்சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு வரும் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை பற்றி விபரங்கள் புதுச்சேரி போலீஸ் இணையதளத்தில் வெளியிடப்படும்.
இதில் ஏதேனும் குழப்பம், சந்தேகம் இருந்தால், விண்ணப்பதாரர்கள் 0413-2277900 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நேரம் (காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை) தொடர்பு கொள்ளலாம். புதுச்சேரி போலீஸ் இணையதளத்தில் லேட்டஸ் நியூஸ் பிரிவை தொடர்ந்து பார்த்து கொள்ளவும் என போலீஸ் தலைமையகம் சீனியர் எஸ்.பி., அனிதாராய் தெரிவித்துள்ளார்.