/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடன் வழங்குவதாக கூறி புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டும் சம்பவம் அதிகரிப்பு சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., எச்சரிக்கை கடன் வழங்குவதாக கூறி புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டும் சம்பவம் அதிகரிப்பு சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., எச்சரிக்கை
கடன் வழங்குவதாக கூறி புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டும் சம்பவம் அதிகரிப்பு சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., எச்சரிக்கை
கடன் வழங்குவதாக கூறி புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டும் சம்பவம் அதிகரிப்பு சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., எச்சரிக்கை
கடன் வழங்குவதாக கூறி புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டும் சம்பவம் அதிகரிப்பு சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., எச்சரிக்கை
ADDED : ஜூன் 10, 2024 06:58 AM
புதுச்சேரி : உடனடி கடன் பெறும் மொபைல் அப்ளிகேஷன் மூலம் கடன் பெற்றவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்கும் சைபர் கிரைம் கும்பலிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க போலீசார் எச்சரித்துள்ளனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த வாலிபருக்கு, உடனடியாக லோன் பெறலாம் என்ற விளம்பரம் இன்ஸ்டாகிராமில் வந்தது. இதை பார்த்ததும், வாலிபர் லோன் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்ததுடன், தன்னுடைய மொபைல்போனில் உள்ள நண்பர்கள் தொலைபேசி எண்கள், புகைப்படங்களை மொபைல் ஆப் பார்ப்பதிற்கு அனுமதி கொடுத்தார். பின்பு, ரூ. 5,000 மொபைல்ஆப் மூலம் கடன் பெற்றார்.
இரண்டு நாட்களுக்கு பிறகு தான் பெற்ற ரூ. 5000 கடன் தொகைக்கு, அந்த மொபைல்ஆப்பில் இருந்து பேசிய நபர் ரூ. 20,000 கட்டுமாறு கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த வாலிபர், தான் ரூ. 5,000 மட்டுமே கடன் பெற்றதாக கூறினார்.
அந்த மொபைல் ஆப் நிறுவனத்தில் இருந்து பேசிய நபர், ரூ. 20,000 கட்டவில்லை என்றால், உங்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, நண்பர்களுக்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்த வாலிபர் ரூ. 20 ஆயிரம் பணத்தை கட்டினார். அதன்பின்பு மேலும் ரூ. 10 ஆயிரம் கட்ட வேண்டும் என மிரட்டி உள்ளனர்.
தன்னிடம் பணம் இல்லை என மறுத்ததால், அந்த வாலிபரின் படத்தை ஆபாசமாக சித்தரித்து, அவரது நண்பர்களின் வாட்ஸ்ஆபிற்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இது சம்பந்தமாக அந்த நபர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி. கலைவாணன் கூறுகையில்; பொதுமக்கள் இணையதளங்களில் வரும் போலியான உடனடி லோன் மொபைல் ஆப்ளிக்கேஷன் விளம்பரங்களை நம்பி டவுன்லோடு செய்து கடன் பெற வேண்டாம். அந்த மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்வதால் தங்களுடைய மொபைலில் உள்ள நண்பர்கள் தொலைபேசி எண்கள், புகைப்படங்களை அவர்கள் திருடி விடுவர். அந்த புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பிவிடுவேன் என பணம் கேட்டு மிரட்டுவார்கள்.
கடந்த 5 நாட்களில் இதுபோல் 20க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு விசாரித்து வருகிறோம். ஆண்கள் பெண்கள் என இரு பாலருக்கும் இதுபோன்ற மோசடிகள் அரங்கேறி வருகிறது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது தொடர்பாக 1930 எண்ணில் புகார் தெரிவிக்கலாம் அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என கூறினார்.