/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வில்லியனுார் பெண்கள் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி வில்லியனுார் பெண்கள் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வில்லியனுார் பெண்கள் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வில்லியனுார் பெண்கள் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வில்லியனுார் பெண்கள் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 27, 2024 04:54 AM

வில்லியனுார்: வில்லியனுார் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி சமுதாய நலப்பணி திட்டம் சார்பில் பள்ளி வளாகத்தில் நடந்த டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பஞ்சாத்தமா தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் சங்கர், தேவி, விஜயலட்சுமி, கனகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் ஆசிரியர் சரவணன் வரவேற்றார். வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் பங்கேற்று டெங்கு நோய் பற்றியும், டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பேசினார். மாணவியர்களுக்கும் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கருணாகரன், அருணாதேவி, பிரேமா ,திலகவதி, உமாதேவி, பிரபாகரன், வேலாயுதம் ஆகியோர் செய்தனர். சமுதாய நலத்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் முருகையன் நன்றி கூறினார்.