/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இணையவழி கற்றல் பொருட்கள் உருவாக்கம் இணையவழி கற்றல் பொருட்கள் உருவாக்கம்
இணையவழி கற்றல் பொருட்கள் உருவாக்கம்
இணையவழி கற்றல் பொருட்கள் உருவாக்கம்
இணையவழி கற்றல் பொருட்கள் உருவாக்கம்
ADDED : ஜூன் 10, 2024 06:56 AM
புதுச்சேரி : ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் சார்பில் ஆசிரியர்கள் 1 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு இணையவழி கற்றல் பொருட்களை உருவாக்கி உள்ளனர்.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடப் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த வகுப்புகளுக்கு முதல் பருவ கற்றல் பொருட்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த கற்றல் பொருட்களில் படத்தை தொட்டால், அதில் உள்ள எழுத்து வார்த்தை அல்லது பாடல் குரல் வடிவில் ஒலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.
மேலும், ஒலிப் புத்தகம் வினாக்களுக்கு பதில் அளித்து பெற்ற மதிப்பெண்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் பணி தாள்கள் இணையவழி கல்வி விளையாட்டுகள் உள்ளிட்டவை அடங்கி தொகுப்பு இடம்பெற்றுள்ளன. நாளை மறுநாள் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், அனைத்து அரசு பள்ளிகளில் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது.
லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் வரவேற்றார்.
மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் சுகுணா, சுகிர்த பாய் நோக்கவுரை நிகழ்த்தினார். கற்றல் பொருட்கள் உருவாக்கிய ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆசிரியர் பாரதிராஜா நன்றி கூறினார்.