Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்

விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்

விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்


ADDED : மே 30, 2024 04:57 AM

Follow on Google

ADDED : மே 30, 2024 04:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், சிறப்பு துப்புரவு முகாம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் பணியினை ஆணையர் எழில்ராஜன் துவக்கி வைத்தார்.

புதுச்சேரி, உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேல் உத்தரவின் பேரில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் சுத்துக்கேணி கிராமத்தில் ஹெச்.ஆர். ஸ்கொயர் தனியார் நிறுவன ஊழியர்கள் மூலம் சிறப்பு துப்புரவு பணி மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் பணி நடந்தது.

இதனை ஆணையர் எழில்ராஜன் துவக்கி வைத்து, பொதுமக்கள் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், ஹெச்.ஆர். ஸ்கொயர் நிறுவனத்தினர் வீடுகளுக்கு வரும் போது, குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். குப்பைகளை சாலையில் வீசுவதை தவிர்த்து, அருகில் உள்ள குப்பை தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதுதொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொது மக்களுக்கு வீடு, வீடாக சென்று வழங்கினார். பின்னர், சாலையோர குப்பைகள் ஊழியர்கள் அகற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap