ADDED : ஜூலை 31, 2024 04:05 AM
காரைக்கால் : புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு மாதம் இரண்டு வெள்ளிக்கிழமைகளில் வருகை புரிந்து காரைக்கால் வாழ் பொதுமக்களுக்கு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக வரும் 2ம் தேதி குழந்தை அறுவை சிகிச்சை, நரம்பியல், சிறுநீரகவியல், இருதயவியல் மருத்துவர்கள் வருகை புரிய உள்ளதால் பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.