/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முன்னாள் ராணுவ வீரர் மனைவி தற்கொலை முன்னாள் ராணுவ வீரர் மனைவி தற்கொலை
முன்னாள் ராணுவ வீரர் மனைவி தற்கொலை
முன்னாள் ராணுவ வீரர் மனைவி தற்கொலை
முன்னாள் ராணுவ வீரர் மனைவி தற்கொலை
ADDED : ஜூலை 26, 2024 10:53 PM
புதுச்சேரி: உழவர்கரையில் முன்னாள் ராணுவ வீரர் மனைவி துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உழவர்கரை, எம்.ஜி.ஆர்., நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் தெய்வநாயகம். முன்னாள் ராணுவ வீரர்.
இவரது மனைவி கீதா, 50; காய்கறி வாங்க நேற்று முன்தினம் வெளியில் சென்ற தெய்வநாயகம் சில மணி நேரத்தில் வீடு திரும்பினார்.
வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது அவரது மனைவி கீதா, ஹாலில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
தகவல் அறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் கீதா கடந்த 2009ம் ஆண்டு மனநிலை பாதிப்பு சிகிச்சை பெற்றுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார் என்பது தெரியவந்தது.
இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.