/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுகாதாரத்துறை வாரிசுதாரர்கள் காத்திருப்பு போராட்டம் சுகாதாரத்துறை வாரிசுதாரர்கள் காத்திருப்பு போராட்டம்
சுகாதாரத்துறை வாரிசுதாரர்கள் காத்திருப்பு போராட்டம்
சுகாதாரத்துறை வாரிசுதாரர்கள் காத்திருப்பு போராட்டம்
சுகாதாரத்துறை வாரிசுதாரர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூன் 11, 2024 06:06 AM

புதுச்சேரி: சுகாதாரத்துறை ஊழியர்களின் வாரிசுதாரர்கள் நலச்சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
புதுச்சேரி சுகாதாரத்துறையில் கருணை அடிப்படையில் பணி கேட்டு 137 வாரிசுதாரர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
ஆனால் 8 ஆண்டுகளாக கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. ஒரு முறை தளர்வு அளித்து பணி வழங்க கோரி புதுச்சேரி அரசு ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் ஆலோசனைப்படி, சுகாதார இயக்குநர் அலுவலகம் வளாகத்தில், வாரிசுதாரர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போராட்டத்திற்கு சங்க ஒருங்கிணைப்பாளர் டேவிட், துணை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினர். சுகாதாரத்துறை வளாகம் வந்த நேரு எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை செயலர் மற்றும் இயக்குநரிடம் மொபைல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, சுகாதாரத்துறை செயலரை நேரில் சந்தித்து பேசுவதாக கூறியதைத் தொடர்ந்து, காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து புறப்பட்டு சென்றனர்.