/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஊர்க்காவல் படை வீரர் பணி எழுத்து தேர்வை தள்ளி வைக்க முடிவு ஊர்க்காவல் படை வீரர் பணி எழுத்து தேர்வை தள்ளி வைக்க முடிவு
ஊர்க்காவல் படை வீரர் பணி எழுத்து தேர்வை தள்ளி வைக்க முடிவு
ஊர்க்காவல் படை வீரர் பணி எழுத்து தேர்வை தள்ளி வைக்க முடிவு
ஊர்க்காவல் படை வீரர் பணி எழுத்து தேர்வை தள்ளி வைக்க முடிவு
ADDED : ஜூன் 03, 2024 04:08 AM
புதுச்சேரி, : ஊர்க்காவல் படை வீரர் எழுத்து தேர்வினை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள கவுரவ பதவியான ஊர்க்காவல் படை வீரர் பணியிடங்களை நிரப்பப்படும் என அரசு அறிவித்தது. முதற்கட்டமாக காலியாக உள்ள 420 ஆண், 80 பெண் ஊர்காவல்படை வீரர்கள் தேர்வு செய்ய கடந்தாண்டு அக்., மாதம் அறிவிப்பு வெளியிட்டு ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டன.
ஆண்கள் 15,697 பேர், பெண்கள் 4,492 பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களுக்கு உடற்தகுதி பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது.
ஆண்களுக்கு நடந்த உடற்தகுதி தேர்வில் 3,034 பேர், பெண்களுக்கான உடற்தகுதி தேர்வில் 1195 பேர் என மொத்தம் 4,229 பேர் எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்றனர். ஆனால், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஊர்க்காவல் படை வீரர் பணிக்கு எழுத்து தேர்வு நடத்தப்படவில்லை.
லோக்சபா தேர்தல் ஓட்டு பதிவு முடிந்ததும், ஊர்காவல்படை வீரர்களுக்கான எழுத்து தேர்வு நடத்த போலீஸ் தலைமையகம் முடிவு செய்தது. அதன்படி ஜூன் 16ம் தேதி ஊர்க்காவல் படை பணிக்கு எழுத்து தேர்வு நடத்த திட்டமிட்டிருந்தது. இதனிடையே ஊர்க்காவல் படை வீரர் எழுத்து தேர்வினை தள்ளி வைக்க போலீஸ் தலைமையகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை வெளியானதும், ஊர்க்காவல் படை வீரர் எழுத்து தேர்வு சம்பந்தமாக அறிவிப்பு வெளியாகிறது.
என்ன காரணம்
மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வுகள் மே 26ம் தேதி நடக்க இருந்தது. லோக்சபா தேர்தல் காரணமாக ஜூன் 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனால் ஊர்க்காவலர் எழுத்து தேர்வும் நடத்துவதில், சிக்கல் ஏற்பட்டது. இரண்டு தேர்வுக்கும் விண்ணப்பித்திருந்த புதுச்சேரி இளைஞர்கள் ஏதாவது ஒன்றை துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது பற்றி போலீஸ் தலைமையகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து, ஊர்க்காவல் படை வீரர் தேர்வினை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஜூன் மாதத்திற்குள் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.