ADDED : ஜூன் 28, 2024 06:19 AM

புதுச்சேரி: கேரியர் கிராப்ட் அகாடமியில் பயின்ற மாணவர்களுக்கு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
கேரியர் கிராப்ட் அகாடமி, பல மென்பொருள் துறை சார்ந்த பயிற்சிகளை நேரடியாக அளிப்பதுடன், வேலைவாய்ப்பு மற்றும் இண்டர்ன்ஷிப் பெற்றுத் தருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அகாடமியில் பயின்ற மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் விழா அதிதி ஹோட்டலில் நடந்தது.
விழாவில் ஐ.பி.எம்., தெற்காசியா இந்தியா வினியோகத் தலைவர் செல்வேந்திரன் ராஜகோபால், கிளவுட் நிர்வாகிக்கப்பட்ட சேவை ரெடிங்டன் துணைத் தலைவர் உதயசங்கர், விங்ஸ் தலைமை நிர்வாகி அன்கிட் ஜெய்ஸ்வால், இ சேல்ஸ் டெக்னாலஜிஸ் தலைமை நிர்வாகி கிஷோர் பூனமல்லி ஆகியோர் கலந்து கொண்டு கேரியர் கிராப்ட் அகாடமி யில் பயின்ற மாணவர்களுக்கு மென்பொருள் தொடர்பான நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சான்றிதழ் மற்றும் பணி நியமன ஆணையை வழங்கினர்.
விழா ஏற்பாடுகளை கேரியர் கிராப்ட் அகாடமி நிர்வாகிகள் செய்திருந்தனர்.