/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லாஸ்பேட்டை இ.சி.ஆரில் பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு லாஸ்பேட்டை இ.சி.ஆரில் பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு
லாஸ்பேட்டை இ.சி.ஆரில் பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு
லாஸ்பேட்டை இ.சி.ஆரில் பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு
லாஸ்பேட்டை இ.சி.ஆரில் பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு
ADDED : ஜூலை 17, 2024 06:10 AM
புதுச்சேரி : லாஸ்பேட்டை இ.சி.ஆரில் பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி வடக்கு சப் கலெக்டர் அர்ஜூன் ராமக்கிருஷ்ணன் நேற்று முன்தினம் மாலை, தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து சென்றார். அப்போது, இ.சி.ஆர்., சிவாஜி சிலை, லாஸ்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அனுமதியின்றி சாலையோரம் ஏராளமான பிறந்த நாள் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.
இது வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் உள்ளதாக, பேனர்கள் குறித்த புகைப்படத்துடன் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். லாஸ்பேட்டை போலீசார் புதுச்சேரி திறந்தவெளி அழகு சீர்குலைத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
கோரிமேடு சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, முருகா தியேட்டர் சிக்னல் அருகே சாலையில் தடையை மீறி பிறந்த நாள் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. பேனரை பறிமுதல் செய்த போலீசார், முதலியார்பேட்டை, காராமணிக்குப்பம், மாரியம்மன் நகர், விக்கி (எ) விக்னேஷ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.