Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாமல்லபுரம் - புதுச்சேரி 4 வழிச்சாலை

மாமல்லபுரம் - புதுச்சேரி 4 வழிச்சாலை

மாமல்லபுரம் - புதுச்சேரி 4 வழிச்சாலை


ADDED : ஆக 02, 2024 11:37 PM

Follow on Google

ADDED : ஆக 02, 2024 11:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை:

விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலை பணியில், நில உரிமையாளர்களுக்கு சேர வேண்டிய மீதமுள்ள இழப்பீடு தொகை ரூ. 10.59 கோடி நடப்பாண்டில் வழங்கப்படும். மேம்பாலம், சர்வீஸ் சாலை அமைக்க கையப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு தொகை ரூ. 7.08 கோடி வழங்கப்படும். குப்பம், துத்திப்பட்டு, செல்லிப்பட்டு, திருவண்டார்கோவில் கிராமங்கள் வழியாக அமைய உள்ள மாமல்லபுரம் - புதுச்சேரி 4 வழிச்சாலை திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடு தொகை நடப்பாண்டில் வழங்கப்படும். இத்துறைக்கு இந்தாண்டு ரூ. 52.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

துறைமுகம்: புதுச்சேரி துறைமுகத்தில் பயணிகள் கப்பல் வந்து செல்ல கூடிய முனையம் அமைப்பதிற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படுகிறது. மீன்பிடி படகுகள் கடலுக்கு செல்வதற்கு ஏதுவாக முகத்துவாரம் துார்வாரும் பணி மேற்கொள்ளப்படும். நடப்பு ஆண்டிற்கு ரூ. 16.03 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us