Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மேல்நாரியப்பனுார் தேர் திருவிழா ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு

மேல்நாரியப்பனுார் தேர் திருவிழா ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு

மேல்நாரியப்பனுார் தேர் திருவிழா ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு

மேல்நாரியப்பனுார் தேர் திருவிழா ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு

ADDED : ஜூன் 03, 2024 04:21 AM


Google News
கள்ளக்குறிச்சி : மேல்நாரியப்பனுார் புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழாவிற்கு வெளி மாவட்ட பக்தர்கள் வந்து செல்ல வசதியாக, ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுாரில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடக்கிறது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பர்.

இந்த ஆண்டு, 118ம் ஆண்டு தேர் திருவிழா வரும் 5ம் தேதி துவங்குகிறது. தொடர்ந்து, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தேர்பவனி நடக்கிறது.

வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தேர் திருவிழாவில் பங்கேற்க வசதியாக, மேல்நாரியப்பனுார் ரயில் நிலையத்தில் ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 11 முதல் 14ம் தேதி வரை, சென்னை எழும்பூர் - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் (22153) அதிகாலை 4:19 மணிக்கும், சேலம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (22154) இரவு 10:45 மணிக்கும் மேல்நாரியப்பனுார் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நிற்கும்.

தற்போது, புதுச்சேரியில் இருந்து மங்களூர் வரை செல்லும் வாராந்திர ரயில் (16855) வரும் 13ம் தேதி இரவு 7:49 மணிக்கும், யஸ்வந்த்பூர் - புதுச்சேரி வாராந்திர ரயில் (16573) வரும் 15ம் தேதி அதிகாலை 2:24 மணிக்கும் மேல்நாரியப்பனுார் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

இத்தகவலை, சேலம் கோட்ட தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us