ADDED : ஜூன் 26, 2024 10:55 PM
காரைக்கால்: காரைக்காலில் மகளுடன் ஏற்பட்ட பிரச்னையில் தாய் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால், திருப்பட்டினம் ராமசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராமபாதம் மனைவி சீதாலெட்சுமி. ராமபாதம் இறந்த நிலையில், தனது கடைசி மகள் வீட்டில் அவர் வசித்து வந்தார். சீதாலட்சுமி நேற்று முன்தினம் தனது மகளுடன் ஏற்பட்ட பிரச்னையில், மனமுடைந்து வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.