Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதைப் பொருள் 'உடல் நலன், நல்ல சிந்தனையை அழித்து விடும்' முதல்வர் ரங்கசாமி பேச்சு

போதைப் பொருள் 'உடல் நலன், நல்ல சிந்தனையை அழித்து விடும்' முதல்வர் ரங்கசாமி பேச்சு

போதைப் பொருள் 'உடல் நலன், நல்ல சிந்தனையை அழித்து விடும்' முதல்வர் ரங்கசாமி பேச்சு

போதைப் பொருள் 'உடல் நலன், நல்ல சிந்தனையை அழித்து விடும்' முதல்வர் ரங்கசாமி பேச்சு

ADDED : ஜூன் 27, 2024 02:46 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக கடற்கரை காந்தி திடலை அடைந்தது. கடற்கரை சாலையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, போதை ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு பேசியதாவது;

அனைவரும் ஆரோக்கியமாக, சிந்தித்து முடிவு செய்பவர்களாக இருக்க வேண்டும்.

அதற்கு நல்ல பழக்கவழக்கம் முக்கியம். இளைஞர், மாணவர்களிடம் உள்ள சில தீய பழக்க வழக்கங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும். போதை நம்மை அடிமையாக்கி உடல் நலனை பாதிப்பதுடன், நல்ல சிந்தனையை அழித்து விடும். சிலர் லாபத்திற்காக இளைஞர்கள், மாணவர்களை சீரழிக்கின்றனர்.

பணம் சம்பாதிக்கலாம் என சிறுவர்களை போதை பொருள் விற்க துாண்டுகின்றனர்.

இது மன்னிக்க முடியாத குற்றம். மாணவர்களை சீரழிப்போரை கடுமையான நடவடிக்கை மூலம் தண்டிக்க வேண்டும். போதை பொருட்களால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

போதைக்கு அடிமையானவர்கள் தங்களின் செயல்பாடே அவர்களுக்கு தெரியாது. அதனால் போதை பொருளுக்கு அடிமையாக மாட்டோம் என உறுதிமொழி ஏற்பது அவசியம்' என்றார்.

ஊர்வலத்தில், பங்கேற்ற மாணவ மாணவிகள் போதை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ், ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, கலைவாணன் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக முருகா தியேட்டர் சிக்னலில் இருந்து போலீசார் போதை தடுப்பு குறித்து ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

பிளாஸ்டிக் குப்பைகள்

விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பிஸ்கெட், தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்திய பின்பு, நேரு சிலை அருகே காலி பாட்டில், பிளாஸ்டிக் கவர்கள் வீசப்பட்டு கிடந்தது. போதை ஒழிப்புக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார், பிளாஸ்டிக் குப்பைகளை சரியான இடத்தில் போட வேண்டும் என்பதையும் சொல்லி கொடுத்து இருக்கலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us