/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அடையாளம் தெரியாத வாகன விபத்துக்கு நஷ்டஈடு வழங்கும் புதிய திட்டம் அடையாளம் தெரியாத வாகன விபத்துக்கு நஷ்டஈடு வழங்கும் புதிய திட்டம்
அடையாளம் தெரியாத வாகன விபத்துக்கு நஷ்டஈடு வழங்கும் புதிய திட்டம்
அடையாளம் தெரியாத வாகன விபத்துக்கு நஷ்டஈடு வழங்கும் புதிய திட்டம்
அடையாளம் தெரியாத வாகன விபத்துக்கு நஷ்டஈடு வழங்கும் புதிய திட்டம்
ADDED : ஜூலை 30, 2024 05:16 AM
புதுச்சேரி: அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் புதிய திட்டத்தை போக்குவரத்துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்துத்துறை ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
மத்திய போக்குவரத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை இதுவரை செயல்பாட்டில் இருந்த கருணைத்திட்டத்திற்கு மாற்றாக புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் அடையாளம் தெரியாத வாகனங்களால், ஏற்படும் சாலை விபத்துக்களில் பாதிக்கப்படுவர்களுக்கு நஷ்டஈடாக 2 லட்சம் ரூபாயும், காயம் அடைபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் இழப்பீடு விசாரணை அதிகாரியாக, தாசில்தார், உழவர்கரை, வில்லியனுார், பாகூர், காரைக்கால், திருநள்ளாறு, மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் துணை தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளனர். அடையாளம் தெரியாத வாகன விபத்துக்களில் பாதிக்கப்படுவர்கள் அந்தந்த பகுதி தாசில்தார் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
தாசில்தார் விண்ணப்பம் பெற்று ஒரு மாதத்திற்குள், அவருடைய விசாரணை அறிக்கையை இழப்பீடு தீர்வு அதிகாரியான கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விசாரணை அறிக்கையை ஆய்வு செய்து, கலெக்டர் 15 நாட்களுக்குள், நஷ்ட ஈட்டுக்கான ஆணை பிரிவு மேலாளர், நியூ இந்தியா இன்சுரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மூலமாக, 15 நாட்களுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈட தொகையை வழங்க வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு, https://transport.py.gov.in என்ற போக்குவரத்து இணையதளத்தில் அணுகி தெரிந்துகொள்ளலாம்.