தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ‘ஆசிட்’ குடித்து பிளம்பர் தற்கொலை 

‘ஆசிட்’ குடித்து பிளம்பர் தற்கொலை 

‘ஆசிட்’ குடித்து பிளம்பர் தற்கொலை 


ADDED : ஜூன் 14, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுசாரம், கவிக்குயில் நகரைச் சேர்ந்தவர் நாராயணன், 63; பிளம்பர். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். குடிபழக்கம் உடைய நாராயணன், கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல், குடிபோதையில் வீட்டில் தகராறு செய்து வந்தார்.

நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டிற்கு வந்த நாராயணனை மனைவி ஜோதி கண்டித்தார். இதனால் மனமுடைந்த நாராயணன், கழிவறையில் இருந்த டாய்லெட் சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டை குடித்தார். 

அருகில் இருந்தவர் நாராயணனை மீட்டு, ஜிப்மரில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நாராயணன் நேற்று காலை இறந்தார். அவரது மகன் அன்பழகன் அளித்த புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us