/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி மத்திய சிறையில் முதல் முறையாக கவியரங்கம் புதுச்சேரி மத்திய சிறையில் முதல் முறையாக கவியரங்கம்
புதுச்சேரி மத்திய சிறையில் முதல் முறையாக கவியரங்கம்
புதுச்சேரி மத்திய சிறையில் முதல் முறையாக கவியரங்கம்
புதுச்சேரி மத்திய சிறையில் முதல் முறையாக கவியரங்கம்
ADDED : ஜூலை 31, 2024 04:07 AM

புதுச்சேரி : புதுச்சேரி மத்திய சிறையில் நடந்த கவியரங்கில், கவிஞர்கள் மற்றும் கைதிகள் கவிதை வாசித்தனர்.
புதுச்சேரி மத்திய சிறையில், வரும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நேற்று வேலுநாச்சியார் இயக்கம் சார்பில் முதல் முறையாக கைதிகள் பங்கேற்ற கவியரங்கம் நடந்தது.
நிகழ்ச்சிக்குச் சிறைதுறை தலைமை கண்காணிப்பாளர் அழகேசன் தலைமை தாங்கி பேசினார். வீரத்தமிழரசி வேலு நாச்சியார் இயக்க நிறுவனத் தலைவர் கலைவரதன், 'விடுதலை வேள்வியில் வீரத் தமிழச்சிகள்' என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வாழ்த்துரை வழங் கினார். இயக்கத்தின் செயலாளர் கலைவாணிகணேசன், முன்னிலை வகித்தார்.
கவியரங்கத்திற்கு இளங்குயில் தலைமை தாங்கினார். இயக்கத்தின் பொறுப்பாளர் காஞ்சனா வரவேற்றார். துணைச் செயலாளர் வெற்றிவேலன் நன்றி கூறினார்.
இதில் கவிஞர்கள் கதிரேசன், சுதர்சனம், சத்யா, தனலட்சுமி விசாலாட்சி குமரவேலு, கதிர்முத்திரத்தினம், சசிகலா, புவனா, திவ்யாராமன், ஜெயந்தி, பார்த்தசாரதி மற்றும் ஏராளமான சிறை கைதிகள் கவிதை வாசித்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக அளிக்கப்பட்டன.