/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தற்கொலை செய்து கொண்ட கைதி உடல் ஜிப்மரில் பிரேத பரிசோதனை தற்கொலை செய்து கொண்ட கைதி உடல் ஜிப்மரில் பிரேத பரிசோதனை
தற்கொலை செய்து கொண்ட கைதி உடல் ஜிப்மரில் பிரேத பரிசோதனை
தற்கொலை செய்து கொண்ட கைதி உடல் ஜிப்மரில் பிரேத பரிசோதனை
தற்கொலை செய்து கொண்ட கைதி உடல் ஜிப்மரில் பிரேத பரிசோதனை
ADDED : ஜூன் 11, 2024 05:44 AM
புதுச்சேரி: காரைக்கால் கிளை சிறையில் தற்கொலை செய்து கொண்ட ஆயுள் தண்டனை கைதியின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில், நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வில்லியனுார் பொறையூர்பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனி மகன் பிரதீஷ், 22; கடந்த 2021ம் ஆண்டு ஏப்., 20ம் தேதி, சந்தைபுதுக்குப்பத்தைச் சேர்ந்த ராஜஸ்ரீ, 17; என்ற மாணவியை வெட்டி கொலை செய்து உடலை சாக்குமூட்டையில் கட்டி பொறையூர் சுடுகாட்டில் வைத்திருந்தார். இந்த வழக்கில் பிரதீஷ்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
காலாப்பட்டு சிறையில் சக கைதிகளை தாக்கியதால், காரைக்கால் கிளை சிறைக்கு பிரதீஷ் மாற்றப்பட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவு சிறை அறையில் பிரதீஷ் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். பிரதீஷ் உடலை ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்று, ஜிப்மர் மருத்துவமனை கொண்டுவரப்பட்ட பிரதீஷ் உடல், நீதிபதி முன்னிலையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்பு, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.