/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சொரப்பூர் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம் சொரப்பூர் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம்
சொரப்பூர் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம்
சொரப்பூர் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம்
சொரப்பூர் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம்
ADDED : மார் 11, 2025 06:12 AM
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம் நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கனவல்லி தாயார் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இந்ந கோவிலில் புனர்பூசத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு திருப்பாவை சேவையும், தொடர்ந்து 9 மணிக்கு பிரபந்த சேவை உற்சவம் நடந்தது.
மதியம் 12 மணிக்கு தீபாரதனை நடந்தது. முன்னதாக பெருமாளுக்கு இளநீர், பால், சந்தனம், பன்னீர் கொண்டு சிறப்பு அபி ேஷகம் நடந்தது. விழாவில் சொரப்பூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிரமாங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.