/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டென்னிஸ் போட்டியில் வெற்றவர்களுக்கு பரிசு டென்னிஸ் போட்டியில் வெற்றவர்களுக்கு பரிசு
டென்னிஸ் போட்டியில் வெற்றவர்களுக்கு பரிசு
டென்னிஸ் போட்டியில் வெற்றவர்களுக்கு பரிசு
டென்னிஸ் போட்டியில் வெற்றவர்களுக்கு பரிசு
ADDED : ஜூலை 27, 2024 01:44 AM

புதுச்சேரி: டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அனிபால் கென்னடி பரிசு வழங்கி பாராட்டினார்.
பாண்டிச்சேரி டென்னிஸ் சங்கம் மற்றும் அகில இந்தியா டென்னிஸ் சங்கம் சார்பில் டெலென்ட் சீரிஸ் 14 வயதுக்குட்பட்ட டென்னிஸ் போட்டி புதுச்சேரியில் நடந்தது. இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், கோவரதன், முதலிடத்தையும், ஹேம்தேவ் மகேஷ் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
அதே போல, பெண்கள் ஒற்றையர் பிரிவில், தியா முதலிடத்தையும், தனுஸ்ரீ இரண்டாம் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, பாண்டிச்சேரி டென்னிஸ் சங்கத் தலைவர் பிரதாபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆகியோர் பரிசுகள் வழங்கி வீரர்களை பாராட்டி கவுரவித்தனர்.