/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி பஸ் நிலையம் இடம் மாறுகிறது புதுச்சேரி பஸ் நிலையம் இடம் மாறுகிறது
புதுச்சேரி பஸ் நிலையம் இடம் மாறுகிறது
புதுச்சேரி பஸ் நிலையம் இடம் மாறுகிறது
புதுச்சேரி பஸ் நிலையம் இடம் மாறுகிறது
ADDED : ஜூன் 14, 2024 05:49 AM
புதுச்சேரி: புதுச்சேரி பஸ் நிலையம் வரும் 16ம் தேதி முதல் ஏ.எப்.டி., திடலுக்கு மாறுகிறது.
புதுச்சேரி பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.31 கோடி செலவில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், பஸ்கள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்வது சிரமமாக உள்ளது.
இதனால், பஸ் நிலையத்தை தற்காலிகமாக வரும் 16ம் தேதி முதல் ஏ.எப்.டி., திடலுக்கு மாற்றப்படும் என புதுச்சேரி நகராட்சி அறிவித்துள்ளது. அதனையொட்டி, ஏ.எப்.டி., திடலில் பயணிகளுக்கான நிழற்குடை அமைத்தல், குடிநீர், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.