இரண்டு தொகுதி சென்டிமென்ட் மீண்டும் அரியணை ஏறும் ரங்கசாமி
இரண்டு தொகுதி சென்டிமென்ட் மீண்டும் அரியணை ஏறும் ரங்கசாமி
ADDED : மே 05, 2026 05:41 PM
புதுச்சேரி: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று 5வது முறையாக ரங்கசாமி முதல்வர் பொறுப்பு ஏற்க உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு தனி கட்சி துவங்கி அ.தி.மு.க., கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த முதல்வர் ரங்கசாமி 17 தொகுதியில் போட்டியிட்டு 15 தொகுதியில் வென்றார்.
இதில் முதல்முறையாக கதிர்காமம், இந்திரா நகர் ஆகிய இரண்டு தொகுதிகள் நின்று வெற்றி பெற்று முதல்வரானர்.2016ம் ஆண்டு தேர்தலில் என்.ஆர்.காங்., 30 தொகுதியில் போட்டியிட்டு 10 தொகுதியில் வென்றது. இதில்,இந்திரா நகர் தொகுதியில் மட்டும் நின்ற ரங்கசாமி வெற்றி பெற்று எதிர்கட்சித் தலைவரானர்.
அதன்பின்னர் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து 15 தொகுதியில் போட்டியிட்ட என்.ஆர்.காங்.,10 தொகுதியில் வெற்றி பெற்றது.இதில், தட்டாஞ்சாவடி,ஏனாம் ஆகிய 2 தொகுதிகளில் நின்று தட்டாஞ்சாவடியில் மட்டும் வென்று முதல்வரானார். அதனை தொடர்ந்து நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 16 தொகுதியில் போட்டியிட்ட என்.ஆர்.காங்.,12 இடங்களில் வெற்றி பெற்றது.
இதில் தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் நின்று வெற்றி பெற்ற ரங்கசாமி மீண்டும் முதல்வராக அரியணை ஏறாவுள்ளார். ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் நின்றால் முதல்வர் ஆவார் என்ற அவரது சென்டிமென்ட் அவருக்கு மீண்டும் கை கொடுத்துள்ளது.





