/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : ஜூன் 26, 2024 07:27 AM

கடலுார் : சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலுார் கோர்ட் டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த முடிகண்டநல்லுாரை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் ஜீவா, 25; இவர், கடந்தாண்டு மார்ச் 7ம் தேதி, வேப்பூர் பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்தார்.
அப்போது, அங்கு வந்த 7ம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமி தனது பாட புத்தகத்தை வீட்டில் வைத்து விட்டு வந்ததாகவும், தனது தாயாருக்கு போன் செய்து தருமாறு கூறினார். ஆனால், ஜீவா போன் செய்யாமலேயே போனை எடுக்கவில்லை எனக்கூறி, வீட்டில் விடுவதாக கூறி சிறுமியை தனது பைக்கில் கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்து, தனது மொபைலில் வீடியோ எடுத்தார். இச்சம்பவத்தை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக ் மிரட்டினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஜீவாவை கைது செய்த வேப்பூர் போலீசார், அவர் மீது கடலுார் சிறப்பு கோர்ட்டில் போக்சோ பிரிவில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதிரத்தினம் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி ரமேஷ், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜீவாவிற்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.70 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ. 7 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.