/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முள்ளோடையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் முள்ளோடையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
முள்ளோடையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
முள்ளோடையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
முள்ளோடையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ADDED : ஜூலை 18, 2024 04:14 AM

பாகூர் : முள்ளோடையில் சாலையோரமாக இருந்தஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது.
புதுச்சேரி - கடலுார் சாலையில், முள்ளோடை துவங்கி மரப்பாலம் வரையில், பல இடங்களில் சாலையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால்,தினம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இவற்றை போக்க பொதுப் பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவினர்,சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கி இருந்தனர்.
இதையடுத்து, நேற்று காலை முள்ளோடையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன் தலைமையில், பொதுப்பணித்துறை, கொம்யூன் பஞ்சாயத்து, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், போலீஸ் பாதுகாப்புடன் சாலை மற்றும் கழிவு நீர் வடிகால்வாய்க்காலை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பெட்டி கடைகளை ஜெ.சி.பி., மற்றும் கிரேன் மூலமாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வியாபாரிகள் தரப்பில்'' கன்னியக்கோவில் தனியார் மதுக்கடை எதிரே சாலையில் இருந்த சென்டர் மீடியன் அகற்றப்பட்டு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் விபத்துக்கள் நடந்து வருகிறது.
முதலில் அங்குள்ள வழியை மூடுங்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் தொடர்ந்து அப்புறப்படுத்தும் பணி நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.