/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளி மாணவர்களுக்கு நர்சிங் படிப்பில் இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு நர்சிங் படிப்பில் இட ஒதுக்கீடு
அரசு பள்ளி மாணவர்களுக்கு நர்சிங் படிப்பில் இட ஒதுக்கீடு
அரசு பள்ளி மாணவர்களுக்கு நர்சிங் படிப்பில் இட ஒதுக்கீடு
அரசு பள்ளி மாணவர்களுக்கு நர்சிங் படிப்பில் இட ஒதுக்கீடு
ADDED : ஜூன் 29, 2024 06:17 AM
புதுச்சேரி : அரசு பள்ளி மாணவர்களுக்கு நர்சிங் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென சென்டாக் மாணவர்கள், பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து நலச்சங்க தலைவர் நாராயணசாமி, கவர்னர் மற்றும் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
புதுச்சேரியில் நர்சிங் படிப்பிற்கான சேர்க்கை தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடந்து வருகிறது.
இதனால் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதுடன், வசதி படைத்த, தனியார் பள்ளி மாணவர்கள், வெளி மாநில மாணவர்கள் மட்டுமே புதுச்சேரி மாநிலத்தில் நர்சிங் படிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நர்சிங் படிப்பு என்பது எட்டாக்கனியாக மாறியுள்ளது. எனவே, அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரி மாநில மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல், அரசு பள்ளி மாணவர்களுக்கு நர்சிங் படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க கவர்னர், முதல்வர் ஆகியோர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.