/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நைனார்மண்டபம் கோவிலில் வரும் 19ம் தேதி செடல் திருவிழா நைனார்மண்டபம் கோவிலில் வரும் 19ம் தேதி செடல் திருவிழா
நைனார்மண்டபம் கோவிலில் வரும் 19ம் தேதி செடல் திருவிழா
நைனார்மண்டபம் கோவிலில் வரும் 19ம் தேதி செடல் திருவிழா
நைனார்மண்டபம் கோவிலில் வரும் 19ம் தேதி செடல் திருவிழா
ADDED : ஜூலை 17, 2024 06:23 AM
அரியாங்குப்பம், : நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் வரும் 19ம் தேதி செடல் திருவிழா நடக்கிறது.
கடலுார் சாலை நாகமுத்து மாரியம்மன் கோவிலில், 41ம் ஆண்டு செடல் திருவிழா கடந்த 11ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினசரி சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் பால்குடம் ஊர்வலம் நடந்தது. நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜை கள் நடந்தது.
இன்று 17ம் தேதி இடிதாங்கி அங்காளம்மன் கோவிலில் இருந்து 108 முளைப்பாரி ஊர்வலமும், நாளை 18ம் தேதி முருகன் - வள்ளி தெய்வானை சாமி வீதியுலா நடக்கிறது. வரும் 19ம் தேதி மாலை 5:00 மணிக்கு செடல் திருவிழா நடக்கிறது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.