/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விபத்தில் சிக்கிய வாலிபரை மருத்துவமனையில் சேர்த்த எம்.எல்.ஏ., விபத்தில் சிக்கிய வாலிபரை மருத்துவமனையில் சேர்த்த எம்.எல்.ஏ.,
விபத்தில் சிக்கிய வாலிபரை மருத்துவமனையில் சேர்த்த எம்.எல்.ஏ.,
விபத்தில் சிக்கிய வாலிபரை மருத்துவமனையில் சேர்த்த எம்.எல்.ஏ.,
விபத்தில் சிக்கிய வாலிபரை மருத்துவமனையில் சேர்த்த எம்.எல்.ஏ.,
ADDED : ஜூன் 13, 2024 08:25 AM
மரக்காணம் : விபத்தில் சிக்கிய வாலிபரை அர்ஜூணன் எம்.எல்.ஏ., மருத்துவமனையில் சேர்த்தார்.
மரக்காணம் அடுத்த சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் புண்ணியகோடி மகன் அருண்,26; இவர், நேற்று மரக்காணத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டார்.
நல்லுார் அருகே சென்ற போது சாலையில் தார்பாய் போட்டு மூடி வைத்திருந்த நெல் மீது பைக் ஏறியதில் வழக்கு விழுந்தார். அதில் படுகாயமடைந்த அருணை, அவ்வழியே காரில் சென்ற திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூணன் மீட்டு, தனது காரில் ஏற்றிச் சென்று முருக்கேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு, அவருக்கு முதலுதவி அளித்த டாக்டர் மேல் சிகிச்சைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லக் கூறினார். ஆனால், 108 ஆம்புலன்ஸ் வர நேரமாகும் எனக் கூறியதால், டாக்டரிடம் எம்.எல்.ஏ., வாக்குவாதம் செய்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.