/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மொரட்டாண்டியில் மரக்கன்று நடும் விழா மொரட்டாண்டியில் மரக்கன்று நடும் விழா
மொரட்டாண்டியில் மரக்கன்று நடும் விழா
மொரட்டாண்டியில் மரக்கன்று நடும் விழா
மொரட்டாண்டியில் மரக்கன்று நடும் விழா
ADDED : ஜூலை 17, 2024 06:19 AM

புதுச்சேரி : குளோபல் கிரீன் ட்ரீ பவுண்டேஷன் சார்பில், சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.
புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மரக்கன்றுகள் வளர்க்கவும், வணிக நிறுவன கடைகள் முன்புறம் மரக்கன்று வளர்க்கவும் மரக்கன்றுகளை வழங்குவதற்கு, குளோபல் கிரீன் ட்ரீ பவுண்டேஷன் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக, குளோபல் கிரீன் ட்ரீ பவுண்டேஷனுக்கு, யூ டியூபர் ஸ்ரீராம் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியின் துவக்கமாக, மொரட்டாண்டி டோல்கேட் அருகே, அதிக அளவு ஆக்ஸிஜன் தரக்கூடிய மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிகழ்ச்சியில் குளோபல் கிரீன் ட்ரீ பவுண்டேஷன் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.