ADDED : ஆக 13, 2024 05:13 AM
அ நிறம் | அளவு
பாகூர்: தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்ற மனைவி மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பாகூர் கம்பன் நகரை சேர்ந்தவர் விஜயன் 46; தனியார் மருத்துவமனை ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி 34; பாகூரில் தையல் பயிற்சி பயின்று வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 7 ம் தேதி நந்தினி தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது கணவர் விஜயன், பாகூர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





