Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் உலக சினிமா திருவிழா இன்று துவக்கம்

புதுச்சேரியில் உலக சினிமா திருவிழா இன்று துவக்கம்

புதுச்சேரியில் உலக சினிமா திருவிழா இன்று துவக்கம்

புதுச்சேரியில் உலக சினிமா திருவிழா இன்று துவக்கம்

ADDED : ஆக 02, 2024 01:33 AM


Google News
புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்று நாட்களுக்கு நடக்கும் உலக சினிமா திருவிழா இன்று துவங்குகிறது.

புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் புதுச்சேரி திரைப்பட இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து, இன்று முதல் வரும், 4,ம் தேதி வரை மூன்று நாட்கள் உலக சினிமா திருவிழாவை நடத்துகிறது.

இந்த திரை விழா, புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில், இன்று மாலை 5:30 மணிக்கு துவங்குகிறது. இந்த சினிமா திருவிழாவை இலங்கையை சேர்ந்த இயக்குனர் பிரசன்னா விதாங்கே துவக்கிவைக்கின்றார். அவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான, 'பாரடைஸ்' சினிமா, தொடக்க திரையிடலாக, திரையிடப்படுகிறது.

இந்த தொடக்க விழாவில் அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் நல்லாம் சதீஷ் தலைமையேற்கிறார். ் சிறப்பு விருந்தினராக, சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், தலைமை செயலர் சரத் சவுகான், அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குனர் லாரன்ட் ஜாலிகுஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த சினிமா விழாவில், இந்தியா, பிரான்ஸ், இலங்கை, துருக்கி, ஈரான், அமெரிக்கா, ஸ்வீடன் ஆகிய ஏழு நாடுகளை சேர்ந்த சினிமாக்கள் திரையிடப்பட உள்ளன. மேலும், பிரசன்னா விதாங்கே, சிவக்குமார், மோகன் ஆகியோரின் சிறப்பு வகுப்புகள் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

உலகளவில் சிறந்த பல சர்வதேச விழாக்களில் விருதுகள் பெற்ற சினிமாக்கள் திரையிடப்படுகின்றன. இந்த விழாவில், சினிமா கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us