/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக புகையிலை தினம் மினி மராத்தான் போட்டி உலக புகையிலை தினம் மினி மராத்தான் போட்டி
உலக புகையிலை தினம் மினி மராத்தான் போட்டி
உலக புகையிலை தினம் மினி மராத்தான் போட்டி
உலக புகையிலை தினம் மினி மராத்தான் போட்டி
ADDED : ஜூன் 10, 2024 06:54 AM
புதுச்சேரி : உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, மினி மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.
கோரிமேடு ஜிப்மர் மருத்துவ சமூக பணியாளர்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நல சேவைகள் இணைந்து உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, மினி மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.
அதில், புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள், குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், புகையிலை பழக்கத்தில் இருந்து விடுபட்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மையப்படுத்தி, மராத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.
இதில், சிறுவர்கள் முதல், பெரியவர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். ஜிப்மர் வளாத்தில் இருந்து முக்கிய சாலைகள் வழியாக சென்று கடற்கரை சாலையில் முடிவடைந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் குலோத்துங்கன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.