/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சித்தானந்தா சுவாமி கோவிலில் 8ம் தேதி 108 சங்காபிேஷகம் சித்தானந்தா சுவாமி கோவிலில் 8ம் தேதி 108 சங்காபிேஷகம்
சித்தானந்தா சுவாமி கோவிலில் 8ம் தேதி 108 சங்காபிேஷகம்
சித்தானந்தா சுவாமி கோவிலில் 8ம் தேதி 108 சங்காபிேஷகம்
சித்தானந்தா சுவாமி கோவிலில் 8ம் தேதி 108 சங்காபிேஷகம்
ADDED : டிச 05, 2025 06:56 AM
புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில், 4வது சோமவாரத்தை முன்னிட்டு, வரும் 8ம் தேதி, 108 சங்காபிேஷகம் நடக்கிறது.
கார்த்திகை மாதம் சோமவாரத்தையொட்டி, கோவிலில், 8ம் தேதி காலை 6:00 மணிக்கு சங்கு பிரதிஷ்டை நடக்கிறது. அதனை தொடர்ந்து, 6:30 மணிக்கு கணபதி ருத்ர ஹோமம், தொடர்ந்து 8:00 மணி முதல் 9:00 மணி வரை மகா அபிேஷகம் நடக்கிறது.
முக்கிய நிகழ்வான, சங்காபிேஷகம் காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை நடக்கிறது. இரவு 9:00 மணியளவில் அர்த்தஜாம பூஜை நடக்கிறது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் குருக்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


