Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 10ம் வகுப்பு தேர்வு நேற்றுடன் நிறைவு

 10ம் வகுப்பு தேர்வு நேற்றுடன் நிறைவு

 10ம் வகுப்பு தேர்வு நேற்றுடன் நிறைவு

 10ம் வகுப்பு தேர்வு நேற்றுடன் நிறைவு

 10ம் வகுப்பு தேர்வு நேற்றுடன் நிறைவு

ADDED : ஏப் 03, 2026 05:16 AM


Google News
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில்தனியார் பள்ளிகளில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது.

தமிழக பாடத்திட்டத்தின் கீழ் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 174 தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 11ம் தேதி துவங்கியது. புதுச்சேரியில் 147 தனியார் பள்ளிகளில் இருந்து 7,078 மாணவர்களும், காரைக்காலில் 27 தனியார் பள்ளிகளில் இருந்து 1,024 மாணவர்களும் தேர்வை எழுதினர்.

நேற்றுடன் தேர்வு நிறைவடைந்ததை அடுத்து, விடைத்தாள் திருத்தும் பணி 6ம் தேதி துவங்குகிறது. தேர்வு முடிவுகள் மே 3வது வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.