/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'நீட்' தேர்வில் புதுச்சேரியில் 2,639 பேர் தேர்ச்சி மாணவர் பிரசாந்த் மாநில அளவில் முதலிடம் 'நீட்' தேர்வில் புதுச்சேரியில் 2,639 பேர் தேர்ச்சி மாணவர் பிரசாந்த் மாநில அளவில் முதலிடம்
'நீட்' தேர்வில் புதுச்சேரியில் 2,639 பேர் தேர்ச்சி மாணவர் பிரசாந்த் மாநில அளவில் முதலிடம்
'நீட்' தேர்வில் புதுச்சேரியில் 2,639 பேர் தேர்ச்சி மாணவர் பிரசாந்த் மாநில அளவில் முதலிடம்
'நீட்' தேர்வில் புதுச்சேரியில் 2,639 பேர் தேர்ச்சி மாணவர் பிரசாந்த் மாநில அளவில் முதலிடம்
ADDED : ஜூன் 15, 2025 06:46 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நீட் நுழைவு தேர்வு எழுதிய 5,149 மாணவர்களில் 2,639 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் பிரசாந்த் 99.99 பெர்சன்டைல் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு மே 4ம் தேதி நாடு முழுவதும் 5,453 மையங்களில் நடந்தது. மொத்தம் 22.7 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
புதுச்சேரியில் 8 மையங்கள், காரைக்கால்-2, மாகி மற்றும் ஏனாமில் தலா ஒன்று என மொத்தம் 10 மையங்களில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 5,266 மாணவர்களில் 5,149 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
இத்தேர்வின் முடிவு நேற்று வெளியானது. அதில், புதுச்சேரி மாநிலத்தில் தேர்வு எழுதியவர்களில் 2,639 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 51.25 ஆகும். கடந்த 2024ம் ஆண்டு நடந்த நீட் நுழைவு தேர்வினை எழுத விண்ணப்பித்திருந்த 6,318 பேரில், 3,433 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
மாநில அளவில் முதலிடம் பிடித்தவர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதுச்சேரி மாநில அளவில் ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர் பிரசாந்த் 99.99 பெர்சன்டைல் மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 127-வது இடத்தை பிடித்துள்ளார்.
சறுக்கியது
கடந்த 2024ம் ஆண்டு நீட் தேர்வில் புதுச்சேரி மாநிலத்தில் 54.34 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு 51.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை ஒப்பிடுகையில் 3.09 சதவீத தேர்ச்சி குறைந்தது.
என்ன காரணம்
இந்தாண்டு நீட் நுழைவு தேர்வு கடினமாகவே இருந்தது. உயிரியல் பாடத்தை தவிர்த்து இயற்பியல், வேதியியல் கேள்விகள் கடினமாக இருந்தது. இயற்பியலில் கணக்கீடு அதாவது கால்குலேஷன் தேவைப்படும் கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டிருந்தன. வேதி சமன்பாடுகள் கேள்விகளை நுழைத்து குழப்பமாக கடினமாக கேட்கப்பட்டிருந்தன. இதன் காரணமாகவே தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது என, கல்வியாளர்கள் தெரிவித்தனர்.