/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றத்தின் 36ம் ஆண்டு விழா அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றத்தின் 36ம் ஆண்டு விழா
அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றத்தின் 36ம் ஆண்டு விழா
அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றத்தின் 36ம் ஆண்டு விழா
அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றத்தின் 36ம் ஆண்டு விழா
ADDED : செப் 22, 2025 02:37 AM
புதுச்சேரி: அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றத்தின் 36ம் ஆண்டு விழா தமிழ்ச்சங்க வளாகத்தில் நடந்தது.
தமிழ் சங்க பொருளாளர் அருள்செல்வம் தலைமையில், முருகேச கந்தசாமி, ஷ்ரவணி மியூசிக் அகாடமி பலாஷ்ரவண்லட்சுமி, சதீஷ்குமார், பாரத் ஆகியோரின் திருப்புகழ் இசை அமிர்தம்நடந்தது.
மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் கலந்து கொண்டு, திருப்புகழ் இல்லத்தின் பெயர் பலகையை திறந்து வைத்து, ஆசியுரை வழங்கினார். மன்றத்தின் செயலாளர் ரத்தினவேல் காமராஜன் வரவேற்றார். தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். சங்க தலைவர் முத்து வாழ்த்தி பேசினார்.
டாக்டர் ரங்கநாயகி வளவன் தலைமையில் நடந்த மகளிர் அரங்கத்தில், விரிவுரையாளர் பூங்குழலி பெருமாள் 'திருப்புகழ் காட்டு அருள்வாயே', டாக்டர் சங்கரதேவி 'மறவேனோ' தலைப்பில் பேசினர். ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியும், நிறுவனருமான சேது முருகபூபதி தலைமையில் திருப்புகழ் ஆய்வரங்கம் கலந்துரையாடல் நடந்தது. பன்னிரு திருமுறை மன்ற தலைவர் நாராயணசாமி முன்னிலை வகித்தார்.
திருப்புகழ் சிந்தனை அரங்கம் காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லுாரி முதல்வர் முருகசாமி தலைமையில் நடந்தது. தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் இளங்கோ 'அருணகிரி நாதரின் பகுத்தறிவு சிந்தனைகள்', சீனு வேணுகோபால் 'திருப்புகழ் காட்டும் மெய்ஞானம்' தலைப்பில் பேசினர். திருப்புகழ் மன்ற செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள் நன்றி கூறினார்.