ADDED : மே 28, 2025 07:22 AM
பாகூர் : பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
கடலுார் அடுத்த காராமணிகுப்பம், சுப்ரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 55; இரும்பு பட்டறை வைத்துள்ளார்.
இவர், கடந்த 26ம் தேதி பைக்கில் தனது மனைவி சாந்தியை அழைத்து கொண்டு புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி சென்று கொண்டிருந்தார். காட்டுக்குப்பம் தனியார் கம்பெனி அருகே சென்ற போது, அவருக்கு பின்னால் வந்த பைக் சத்தியமூர்த்தி பைக் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி சத்தியமூர்த்தி மற்றும் அவரது மனைவி சாந்தி கீழே விழுந்து, படுகாயமடைந்தனர். அதேபோல், விபத்து ஏற்படுத்திய பைக்கில் வந்த மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த ஆகாஷ், தானிஷ் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.
நால்வரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.