/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லோடுமேனை கடத்தி சென்று தாக்கிய மைத்துனர் உட்பட 7 பேர் கைது லோடுமேனை கடத்தி சென்று தாக்கிய மைத்துனர் உட்பட 7 பேர் கைது
லோடுமேனை கடத்தி சென்று தாக்கிய மைத்துனர் உட்பட 7 பேர் கைது
லோடுமேனை கடத்தி சென்று தாக்கிய மைத்துனர் உட்பட 7 பேர் கைது
லோடுமேனை கடத்தி சென்று தாக்கிய மைத்துனர் உட்பட 7 பேர் கைது
ADDED : ஜூன் 12, 2025 12:26 AM
புதுச்சேரி : லோடுமேனை கடத்தி சென்று, தாக்கிய மைத்துனர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, பள்ளிக்கரணையை சேர்ந்தவர் பாலாஜி, 25; லோடுமேன். இவரது பாட்டி வீடு புதுச்சேரி, நாவற்குளத்தில் உள்ளதால், அடிக்கடி பாட்டி வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது, எதிர்வீட்டை சேர்ந்த காயத்ரி என்பவருடன் காதல் ஏற்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டு, சென்னையில் வசித்து வந்தார்.
இதற்கிடையே, குடும்ப தகராறு காரணமாக பாலாஜியிடம் கோபித்து கொண்ட காயத்ரி புதுச்சேரியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து தங்கினார். நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி வந்த பாலாஜி, மனைவி காயத்ரியை பார்க்க, எஸ்.வி.பட்டேல் சாலையில் உள்ள அவரது அண்ணன் வினோத்குமார் நடத்தி வரும் கடைக்கு சென்றார்.
கடையில் இருந்த வினோத்குமார் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து பாலாஜியை, அங்கிருந்து பைக் மூலம் நாவற்குளம் கடத்தி சென்று, இருளான பகுதியில் உருட்டு கட்டையால் தாக்கினர்.
பாலாஜி புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து, வினோத்குமார், 31; அவரது நண்பர்களான வசந்த், 35; குணசீலன், 26; கர்ணன், 35; மணிமாறன், 30; வெற்றிச்செல்வன், 31; பிரேம்குமார், 3 1; ஆகிய 7 பேரை கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.