Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'உயர்கல்வியில் சிறக்க அடித்தளம் அவசியம்'

'உயர்கல்வியில் சிறக்க அடித்தளம் அவசியம்'

'உயர்கல்வியில் சிறக்க அடித்தளம் அவசியம்'

'உயர்கல்வியில் சிறக்க அடித்தளம் அவசியம்'

ADDED : அக் 02, 2025 11:15 PM


Google News
புதுச்சேரியில் 'தினமலர்' நாளிதழ் மற்றும் தி ஸ்காலர் பள்ளி இணைந்து விஜயதசமி நன்நாளில் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தர வேண்டும், நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு 'அ'னா... 'ஆ'...வன்னா எழுதும் வித்யாரம்பம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

பண்டைய காலம் தொட்டு 'அ'னா... 'ஆ'வன்னா நெல்லில் எழுதுவது வழக்கம். அதேபோல் இன்று தி ஸ்காலர் பள்ளியில் விஜயதசமி நன்நாளில் எழுத்தை எழுத கற்றுக்கொடுக்க துவங்கி உள்ளனர். அதற்கு எனது மனமார்ந்த நன்றி. குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும், அவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்பது நமது எண்ணம். அதற்கு அரசும், நமது கல்வி கொள்கையும் சிறந்த முறையில் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பள்ளி கல்வியின் அடித்தளம் நன்றாக இருந்தால்தான் உயர்கல்விக்கு செல்ல முடியும். அந்த நிலையில் நல்ல பள்ளிக் கல்வியான ஆரம்ப கல்வியை கொடுப்பதில் அரசு பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.

எல்லோருக்கும் கல்வி என்ற நிலையில் பட்ட படிப்பை படிப்பதற்கு நமது புதுச்சேரி அரசு தேவையான அளவிற்கு கல்லுாரிகளை கொண்டு வந்துள்ளது. புதுச்சேரியில் எல்லோரும் பட்டம் படித்தவர்கள் என்ற நிலையை அரசு உருவாக்கியுள்ளது.

ரங்கசாமி, முதல்வர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us