Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சட்டசபை தேர்தலில் புதிய அணி உதயமாகிறது ஓரணியில் திரளும் இந்நாள் - முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தனியார் ஓட்டலில் ரகசிய ஆலோசனை  

சட்டசபை தேர்தலில் புதிய அணி உதயமாகிறது ஓரணியில் திரளும் இந்நாள் - முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தனியார் ஓட்டலில் ரகசிய ஆலோசனை  

சட்டசபை தேர்தலில் புதிய அணி உதயமாகிறது ஓரணியில் திரளும் இந்நாள் - முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தனியார் ஓட்டலில் ரகசிய ஆலோசனை  

சட்டசபை தேர்தலில் புதிய அணி உதயமாகிறது ஓரணியில் திரளும் இந்நாள் - முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தனியார் ஓட்டலில் ரகசிய ஆலோசனை  

ADDED : செப் 27, 2025 08:21 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: என்.ஆர்.காங்.,-பா.ஜ., தி.மு. க.,-காங்., கட்சிக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள முன்னாள்-இந்நாள் எம்.எல்.ஏ.,க்கள் ரகசியமாக ஆலோசனை நடத்தினர்.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில், அனைத்து கட்சிகளும் தனி வியூகங்களை அமைத்து வருகின்றன. ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசு, தி.மு.க., - காங்., கட்சிக்கு இணையாக ஒரு புதிய அணியை ஏற்படுத்தி சட்டசபை தேர்தலை சந்திக்க தனி வியூகம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு பின்னணியில் முன்னாள் - இந்நாள் எம்.எல்.ஏ.,க்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தனியார் ஓட்டலில் சந்தித்து, புதிய அணி குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் நேரு எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க் கள் அசனா, சாமிநாதன், மறைந்த சபாநாயகர் கண்ணன மகன் விக்னேஷ் கண்ணன் ஆகியோர் நீண்ட நேரமாக ஆலோசனை நடத்தினர்.

புதிய அணிக்காக ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கூறுகையில், 'ஊழலில் திளைத்துள்ள ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசு, தி.மு.க., -காங்., புதுச்சேரிக்கு இனியும் தேவை இல்லை. இந்த கட்சிகளுக்கு மாறி மாறி ஓட்டு போட்டு ஒன்றும் நடக்கவில்லை. ஊழல் செய்து, மாநில வளர்ச்சியை பின்னுக்கு தள்ளிவிட்டது தான் மிச்சம்.

எனவே இந்த கட்சிகளை அகற்ற ஒத்த கருத்து உடையவர்களை ஒருங்கிணைத்து வருகிறோம். எங்களுடன் இணைய பல்வேறு கட்சியில் இருந்து பேசி வருகின்றனர். புதிய கட்சிகளுடன் ஓரணியில் புதுச்சேரி வளர்ச்சிக்காக பயணிப்போம்.

சட்டசபை தேர்தல் நெருங்கும்போது எங்களின் பலம் தெரிய வரும். ஊழல் இல்லாத நேர்மையாக அரசினை புதுச்சேரியில் கட்டமைத்து, மாநில வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு. அதில் வெற்றியும் பெறுவோம் என்றனர் நம்பிக்கையுடன்.

புதிய கட்சியுடன் பயணிப்போம் என்று முன்னாள் - இந்நாள் எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசித்துள்ளதால் விரைவில் நடிகர் விஜயின் த.வெ.க.,வுடன் இணைந்து புதிய அணியை அமைக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us