/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சார்காசிமேடு சாலையில் விபத்து அபாயம் சார்காசிமேடு சாலையில் விபத்து அபாயம்
சார்காசிமேடு சாலையில் விபத்து அபாயம்
சார்காசிமேடு சாலையில் விபத்து அபாயம்
சார்காசிமேடு சாலையில் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 22, 2025 01:51 AM

பிள்ளையார்குப்பம் -- சார்காசிமேடு சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையையொட்டி, சார்காசிமேடு சுடுகாடு பாதை சந்திப்பில் இருந்து புதுச்சேரி - கடலுார் சாலை பிள்ளையார்குப்பம் சந்திப்பு வரை வடிகால் செல்கிறது.
சுமார் ஒரு கி.மீ., நீளமுள்ள இந்த வாய்க்காலில் தடுப்பு சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. தற்போது, இந்த வாய்க்கால் முழுவதுமாக ஆகாயத்தாமரை வளர்ந்துள்ளது.
இதனால், வாய்க்காலும், சாலையும் ஒரே மட்டத்தில் உள்ள நிலையில், வளைந்து, நெளிந்து செல்லும் இந்த சாலையில், எச்சரிக்கை பலகை மற்றும் மின் விளக்கு வசதியும் இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனத்திற்கு வழி விட சாலையோரம் ஒதுங்கும் வாகனங்கள் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் அபாயம் நிலவி வருகிறது.
பெரிய விபத்து நடக்கும் முன்பாக, பொது மக்களின் நலன் கருதி, பிள்ளையார்குப்பம் - சார்காசிமேடு சாலையில் உள்ள வாய்க்காலில் தடுப்பு சுவர், சாலை வளைவுகள் குறித்த எச்சரிக்கை பலகை மற்றும் மின் விளக்கு வசதி ஏற்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.