/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓராண்டு சான்றிதழ் படிப்பு இன்று சேர்க்கை துவக்கம் ஓராண்டு சான்றிதழ் படிப்பு இன்று சேர்க்கை துவக்கம்
ஓராண்டு சான்றிதழ் படிப்பு இன்று சேர்க்கை துவக்கம்
ஓராண்டு சான்றிதழ் படிப்பு இன்று சேர்க்கை துவக்கம்
ஓராண்டு சான்றிதழ் படிப்பு இன்று சேர்க்கை துவக்கம்
ADDED : ஜூன் 12, 2025 12:40 AM
புதுச்சேரி : மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் ஓராண்டு சான்றிதழ் வகுப்பிற்கான சேர்க்கை இன்று துவங்குகிறது.
மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் ராமகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இந்திய அரசின் தேசிய திறந்த வெளிப்பள்ளி அங்கீகாரத்துடன், லாஸ்பேட்டை, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஓராண்டிற்கான சான்றிதழ் படிப்பிற்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, அடிப்படைக் கல்வித்தகுதியே இல்லாதவர்களுக்கு 8ம் வகுப்பு அடிப்படை கல்வி சான்றிதழ், எழுத படிக்கத் தெரிந்தவர்களுக்கு 10ம் வகுப்பு சான்றிதழ், பிளஸ் 1 தோல்வி அடைந்தவர்கள் ஓராண்டு வீணாகாமல் நேரடியாக பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து படிப்பது, பிளஸ் 2 தோல்வி அடைந்தவர்கள், தோல்வி அடைந்த பாடங்களை மட்டும் தேர்வு செய்து உடனடித் தேர்வு எழுதுவது உள்ளிட்ட வகுப்புகளில் சேரலாம்.
இந்த வகுப்புகளில் சேரும் மாணவர்கள் பெறும் சான்றிதழ்கள் மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய திறந்தவெளிக் கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும். இந்த சான்றிதழ் பெற்ற மாணவர்கள் எந்த ஒரு உயர்படிப்பையும் அனைத்து பல்கலை மற்றும் கல்லுாரிகளிலும் தடையின்றி படிக்கலாம்.
இந்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகளில் சேர விரும்புவோர், லாஸ்பேட்டை, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தை இன்று (12ம் தேதி) முதல் அணுகலாம்.