Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மது கடத்திய வாலிபர் கைது

மது கடத்திய வாலிபர் கைது

மது கடத்திய வாலிபர் கைது

மது கடத்திய வாலிபர் கைது

ADDED : பிப் 21, 2024 06:52 AM


Google News
புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு மது கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, காட்டேரிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் சீட்டின் கீழ் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதையடுத்து அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அவர், விழுப்புரம் மாவட்டம் வானுார் அருகே உள்ள வி.பரங்கனியை சேர்ந்த ராஜேஷ், 35, என்பதும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் பகுதிக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

இது குறித்து காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, ராஜேைஷ கைது செய்து, அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us