Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கால்நடை மருத்துவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கால்நடை மருத்துவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கால்நடை மருத்துவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கால்நடை மருத்துவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ADDED : அக் 09, 2025 11:29 PM


Google News
புதுச்சேரி: கால்நடைத்துறை இயக்குனர் லதா மங்கேஷ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைத்துறையில், காலி பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. காலியாக உள்ள 8 கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணிக்கு புதுச்சேரியை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பத்தை, கால்நடைத்துறை இணைய தளத்தில், பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, வரும் 24ம் தேதி, மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விபரங்கள் அறிய துறையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us