/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/300 பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கு விண்ணப்பம்... வரவேற்பு; பிப்., 22ம் தேதி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்300 பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கு விண்ணப்பம்... வரவேற்பு; பிப்., 22ம் தேதி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்
300 பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கு விண்ணப்பம்... வரவேற்பு; பிப்., 22ம் தேதி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்
300 பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கு விண்ணப்பம்... வரவேற்பு; பிப்., 22ம் தேதி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்
300 பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கு விண்ணப்பம்... வரவேற்பு; பிப்., 22ம் தேதி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்

ஆன்லைன்
இன்று 23 ம்தேதி காலை 10 மணி முதல் அடுத்த மாதம் 22 ம்தேதி மாலை 5.45 மணி வரை https://recruitment.py.gov.in என்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு,ஆந்திரா,கேரளா அல்லது மத்திய அரசின் டெட் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது தளர்வு
பயற்சி பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 12.02.2024 அன்று 18 வயது முதல் 30 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.இருப்பினும் ஓ.பி.சி., எம்.பி.சி., மீனவர், முஸ்லீம் பிரிவினருக்கு 3 ஆண்டுகள், எஸ்.சி., பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு. மாற்று திறனாளிகளுக்கு 45 வயது வரையிலும், எஸ்.சி., பிரிவு மாற்றுதிறனாளிகளுக்கு 50 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
இட ஒதுக்கீடு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள 300 பயற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் பிராந்திய ரீதியாக புதுச்சேரி, காரைக்கால் 286, மாகி 12, ஏனாம் 2 என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளன.
உதவி மையம்
விண்ணப்பிக்கும்போது ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகங்களுக்கு 0413-2207369 என்ற எண்ணை அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும்,மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தொடர்பு கொள்ளவும்.


